மூதுார் மாவடிச்சேனையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணத்தை குறித்து இளைஞர் ஒருவர் தனது ஆதங்கத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர்அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளவை,
உன்னை கொலை செய்த சமூகத்தில் நானும் ஒருவன் தான் தங்கையே என்னை மன்னித்து விடு உன் ஆத்மா சாந்தியடையட்டும்
மனிதாபிமானம் செத்து சுயநலவாதிகளாக நகரப்புறங்களை விட கிராமங்களும் மாற்றம் அடைந்து விட்டது என்பது தான் மனதுக்கு வேதனையாக இருக்கிறது.
எங்கடப்பா வெருகல் ஏரியா பக்கம் சமூக செயற்பாட்டாளர்கள்,என்று சொல்லி வெள்ளையும் சொள்ளையுமாக திரியுறவங்களை கண்டீங்களா?
மாவடிச்சேனையில் இருக்கிறவங்க படித்த கல்வி அறிவு பணம் இருக்கும் சமூகம்தான் என்பதை நிருபித்து விட்டீர்கள் மக்காள்..
அதைவிட அந்த பிள்ளையின் தந்தையும்அவரின் சகோதரங்களும் தாயின் சகோதரங்களும் அந்த பிள்ளையின் இறுதிசடங்குகளில் பங்கு பற்ற எந்த தகதியும்அற்றவர்கள் நீங்கள் சென்றால் அந்த பிள்ளையின் ஆத்மாகூட சாந்தியடையாது.
இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.